ஓட்டேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது: ஒருவர் தலைமறைவு.

ஓட்டேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது: ஒருவர் தலைமறைவு.
X
பைல் படம்
ஓட்டேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவானார்.

சென்னை ஓட்டேரி பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி வயது 26 எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி இரவு 11 மணியளவில் வேலைக்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் பின்புறம் உள்ள தேவி பவானி எல்லையம்மன் கோவில் தெருவில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் காலை வந்து பார்த்த போது, வண்டியை காணவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்து விட்டு இது குறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் மூன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று ஓட்டேரி போலீசார் ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ஆறாவது தெருவைச் சேர்ந்த தினேஷ் வயது 20 மற்றும் ஓட்டேரி பிரிக்லின் ரோடு பகுதியைச் சேர்ந்த அப்புன்ராஜ் வயது 20 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான முகேஷ் வயது 20 என்ற நபரை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!