மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மனைவி

மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மனைவி
X

பிரதீப்.

சென்னை ஓட்டேரியில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவனை, மனைவி சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி புதிய வாழை மா நகர் 1 வது தெருவைச் சேர்ந்தவர் பிரதீப் வயது 43. இவருக்கு திருமணமாகி பிரீத்தா 41 என்ற மனைவியும் 20 வயதில் ஒரு மகள் மற்றும் 10 வயதில் ஒரு மகன் உள்ளார். மகள் தனியார் கல்லூரியில் பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். பிரதீப் வேலை இல்லாததால் அவரது தந்தை சுப்பிரமணிக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவரது தாய் தந்தை இருவரும் பக்கத்து தெருவில் உள்ள வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரதீப் அடிக்கடி குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் முழு குடிபோதையில் வந்த பிரதீப், சாப்பிட்ட பின் அனைவரும் தூங்கியுள்ளனர். இரவு. 11 மணி அளவில் கீழே படுத்திருந்த தனது 20 வயது மகளிடம் பிரதீப் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது மகளின் அலறல் சத்தம் கேட்டு ப்ரீத்தா உடனடியாக லைட்டை போட்டு பிரதீப்பை எழுந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.

அப்போது பிரதீப் ப்ரீத்தாவை பலமாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்து பார்த்த தனது 10 வயது மகனையும் பிரதீப் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவரும் கீழே விழுந்துள்ளார். அப்போது மீண்டும் தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் வேறு வழியின்றி ப்ரீத்தா விட்டிருந்த சுத்தியலை எடுத்து பிரதீப்பின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். அப்போது பிரதீப் சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட சொட்ட துடிதுடித்து உயிரிழந்தார்.

உடனே செய்வதறியாது பிரித்தா மற்றும் அவரது மகள், மகன் மூன்று பேரும் கதறி அழுதனர். அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்த போது, வீட்டில் ரத்தக்கறையுடன் பிரதீப் உயிர் இழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து பிரித்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!