புளியந்தோப்பில் மனைவி மீது சந்தேகப்பட்ட கணவரை உறவினரே குத்தி கொன்ற கொடூரம்
கைது செய்யப்பட்ட சதீஷ்.
சென்னை, புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர பாபு 40. இவருக்கு மெர்சி 38 என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர். மெர்சியின் தம்பி சீனிவாசலு என்பவரின் மகளுக்கு வருகின்ற 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக புளியந்தோப்பில் உள்ள ராஜேந்திர பாபு வீட்டில் நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது மெர்சியின் அக்கா ருத்ரமாவின் மருமகன் சதீஷ் 30. என்பவரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அப்போது ராஜேந்திர பாபு முழு மது போதையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சதீஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சதீஷும் மது அருந்தி இருந்தார். மேலும் மெர்சிக்கும் சதீஷ்க்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி சண்டையிட்டு உள்ளார் ராஜேந்திர பாபு.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், ராஜேந்திர பாபுவை தள்ளி விட்டு கீழே இருந்த கல்லை எடுத்து அவர் மீது போட்டுள்ளார். மேலும் அங்கிருந்த கத்தியால் ராஜேந்திர பாபு கழுத்தில் குத்தி உள்ளார். அதன் பிறகு அனைவரும் வீட்டிற்குள் சென்று விட்டனர். ராஜேந்திர பாபு தெரு முனை வரை வந்து சுய நினைவு இல்லாமல் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில் உறவினர்கள் பார்த்து மெர்சியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே உறவினர்கள் ராஜேந்திர பாபுவை மீட்டு அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்த தகவல் புளியந்தோப்பு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. புளியந்தோப்பு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சதீஷ்க்கும் ராஜேந்திர பாபுவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புளியந்தோப்பு போலீசார் வியாசர்பாடியில் பதுங்கியிருந்த சதீஷை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் என்னையும் அவரது மனைவியையும் சேர்த்து வைத்து பேசியதால் ஆத்திரத்தில் இதுபோன்று செய்து விட்டேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu