உணவு டெலிவரி செய்யும் நபரிடம் பணம், வாகனம் வழிப்பறி கொள்ளை

உணவு டெலிவரி செய்யும் நபரிடம் பணம், வாகனம்  வழிப்பறி கொள்ளை
X
உணவு டெலிவரி செய்யும் நபரிடம் வாகனம் மற்றும் செல்போன் பறித்த நபர் கைது

சென்னை கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர் 2வது தெருவில் வசித்து வரும் சிவபிரகாசம், (20) என்பவர், கொடுங்கையூரிலுள்ள ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சிவபிரகாசம், ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை எடுத்துக் கொண்டு இன்று அதிகாலை 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் எம்.கே.பி.நகர், ஜெ.ஜெ.நகர் 7வது தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 நபர்கள் சிவபிரகாசத்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, சிவபிரகாசத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, இருசக்கர வாகனம், 1 செல்போன் மற்றும் பணம் ரூ.200 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து சிவபிரகாசம், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், சக்திவேல்,அவரது நண்பர் எபி சேர்ந்த வழிப்பறியில் ஈடுபட்டதும், எபி செல்போனுடன் தலைமறைவானதும், சக்திவேல் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.மேலும் தலைமறைவாக உள்ள எபியை தேடி வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!