திருவிக நகர் விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருவிக நகர் விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
X

ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம். 

திருவிக நகரில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

சென்னை திருவிக நகரில் அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் சிவ-விஷ்ணு திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், சிவன் சன்னதி, விஷ்ணு சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, சாய்பாபா சன்னதி, நவகிரக சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. தினமும் ஏராளமான மக்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் இன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை அன்று விநாயகர் பூஜையுடன் தொடங்கிய இந்த மகா கும்பாபிஷேகத்தில் மகா கணபதி யாகம், மகாலட்சுமி யாகம் நடைபெற்றன. மேலும் அன்றைய தினம் கங்கையில் இருந்து புனிதநீர் வரவழைக்கப்பட்டது. நேற்று பஞ்சகல்யம், விசேஷ சாந்தி உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. மேலும் இன்று காலை கோவில் விமான கோபுரங்களுக்கு புனித நீர் மூலம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலமூர்த்தி அனைத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்த மகா கும்பாபிஷேகம் செல்வ கபில சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் பாஸ்கர் குருக்கள், பாலசுப்பிரமணியன் குருக்கள், தன சேகர் ஆகியோர் முன்னிலையில் கோவில் நிர்வாக பணியாளர்கள் ஏராளமானோர் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். பெரம்பூர் திருவிக நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!