கொரோனா விழிப்புணர்வாக மாஸ்க் மாலை அணிந்து பாமக பெண் வேட்பாளர் மனுதாக்கல்

கொரோனா விழிப்புணர்வாக மாஸ்க் மாலை அணிந்து பாமக பெண் வேட்பாளர் மனுதாக்கல்
X

மாஸ் மாலையுடன் மனுதாக்கல் செய்ய வந்த பாமக வேட்பாளர் கற்பகம்.

சென்னையில் கொரோனா விழிப்புணர்வுக்காக மாஸ்க் மாலை அணிந்து வந்து பாமக பெண் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கலின்போது தங்களை வேட்பாளர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவிக நகர் 6வது மண்டலத்தில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்த 75 வது பாமக வேட்பாளர் கற்பகம் கொரோனா விழிப்புணர்வை வலியுறுத்தி முகக் கவசங்களை மாலையாக கட்டி அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இவர் பாமகவில் திருவிக நகர் பகுதி மகளிர் அணி தலைவராக உள்ளார். இவரது கணவர் கார்த்திகேயன் பாமகவில் மாவட்ட அமைப்பு தலைவராக உள்ளார்.

தேர்தல் நேரத்தில் நாம் முகக்கவசம் அணிந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக முகக்கவசம் அணிந்தபடி மாஸ்க் மாலையை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததாக கற்பகம் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு