சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸ் ரோந்து வாகனம் அடித்து உடைப்பு

சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸ் ரோந்து  வாகனம் அடித்து உடைப்பு
X

சேதப்படுத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனம்.

சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸ் ரோந்து வாகனத்தை அடித்து உடைத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபரிபவர் சுரேஷ்குமார். இவர் இன்று காலை நான்கு மணி அளவில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது காவல் நிலையத்திற்குள் ஓடி வந்த ஒரு நபர் தன்னை யாரோ வெட்ட வருவதாக தெரிவித்தார். உடனே தலைமை காவலர் மற்றும் போலீசார் வெளியே வந்து பார்த்தபோது வெளியே யாரும் இல்லை. ஓடி வந்த நபர் சற்று மனநலம் குன்றியவர் போன்று இருந்தார். போலீசார் அவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்

உடனே காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த அந்த நபர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோந்து வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அந்த நபர் புளியந்தோப்பு பட்டாளம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 40 )என்பது தெரியவந்தது. உண்மையிலேயே அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டாரா என்பது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!