சென்னை: அனைத்து மத வழிபாட்டு தலங்களின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை

சென்னை: அனைத்து மத வழிபாட்டு தலங்களின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை
X

வழிபாட்டு தலங்களின் பிரதிநிதிகளுடன் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் கூடுவதை தவிர்க்க போலீசார் வேண்டுகோள்.

சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு, இரவு நேர ஊரடங்கு உத்தரவு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடல் என தற்போது கட்டுப்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் காவல் துறை சுகாதாரத்துறை மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் சென்ற முறை கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் வட சென்னையில் ஓட்டேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனை அடுத்து ஓட்டேரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா, இன்று ஓட்டேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களை நிர்வாகிக்கும் நிர்வாகிகள் மற்றும் தேவாலயங்களை நிர்வாகிக்கும் பாதிரியார்கள் மற்றும் மசூதிகளை நிர்வாகிக்கும் நிர்வாகிகள் என அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், அதிகப்படியான கூட்டங்களை தவிர்க்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடி இருக்கும்போது வேறு எந்த இடத்திலும் கூட்டம் கூடி வழிபாடு நடத்த கூடாது என்றும் இதன் காரணமாக தொற்றின் வேகம் அதிகரிக்க கூடும் எனவும் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்திற்கு வந்திருந்த அவர்களும் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தனர். ஓட்டேரி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்வதால் மசூதிகள் மூடப்பட்டு இருக்கும்போது பொது இடங்களில் அவர்கள் கும்பலாக கூடி தொழுகை நடத்துவதன் மூலம் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதால் அவர்களுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!