காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு

காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு
X
சென்னை புளியந்தோப்பில், காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்தவர் வீட்டில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயின.

சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வரதன் வயது 24. இவர் புரசைவாக்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்து வருகிறார் நேற்றிரவு 11 மணியளவில் இவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டு உள்ளது. எனவே காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு படுத்து தூங்கியுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது, அவருடைய 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு செல்போன் மற்றும் 18,000 ரூபாய் மதிப்புள்ள மற்றொரு செல்போன், 6000 ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம் உள்ளிட்டவை திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு வரதன்தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்