ஓட்டேரியில் திறந்து இருந்த வீட்டில், உள்ளே நுழைந்து திருடிய பிச்சைக்காரி கைது

ஓட்டேரியில் திறந்து இருந்த வீட்டில், உள்ளே நுழைந்து திருடிய பிச்சைக்காரி கைது
X

கைது செய்யப்பட்ட பிச்சைக்கார பெண்.

பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை ஓட்டேரி பிரிக்லின் ரோடு 5வது குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் திலகவதி 32. இவர் புரசைவாக்கம் பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 17ஆம் தேதி மதியம் 3 மணியளவில் வீட்டை திறந்து வைத்து விட்டு மாடியில் உள்ள துணிகளை எடுத்து வர சென்று இருந்தார். அப்போது கீழே வந்து பார்த்தபோது பீரோ திறந்து இருந்தது. அப்போது பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதில் வீட்டில் இருந்த 4 சவரன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்தது இதுகுறித்து திலகவதி ஓட்டேரி குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதே பகுதியில் பிச்சை எடுத்து வரும் முனியம்மாள் வயது 40 என்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி தனக்கு தெரிந்த வேறு ஒருவரிடம் கொடுத்து விற்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 29 கிராம் தங்க நகைகளை மீட்டனர். மேலும் முனியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!