காலி செய்ய மறுத்த வாடகைதாரருக்கு வெட்டு: வீட்டின் உரிமையாளர் கைது

காலி செய்ய மறுத்த வாடகைதாரருக்கு வெட்டு: வீட்டின் உரிமையாளர் கைது
X
புளியந்தோப்பில், வீட்டை காலி செய்ய மறுத்த வாடகைதாரரை அரிவாளால் வெட்டிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 4வது தெருவில் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 38, இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு பணி செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடமாக மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறார். இந்த வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் வயது 44. சதீஷ்குமார் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இந்த வீட்டில் ஒப்பந்த அடிப்படையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம், சதீஷ்குமாரை வீட்டைவிட்டு காலி செய்யுமாறு கூறியுள்ளார் அதற்கு சதீஷ்குமார் நான் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயில் 50 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்தால்தான், முதற்கட்டமாக வீடு பார்க்க முடியும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இது சம்பந்தமாக நேற்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் தனது வீட்டில் இருந்த அருவாளை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் வெட்டினார்.

இதில் சதீஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இது சம்பந்தமாக புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமு கத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு