/* */

சென்னையில் கண்மூடித்தனமாக போதையில் பொதுமக்களை வெட்டிய 2 ரவுடிகள் கைது

சென்னை, புரசைவாக்கத்தில் கண்மூடித்தனமாக போதையில் பொதுமக்களை வெட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓட்டேரி பிரிக்லின் ரோடு பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வழக்கம் போல அனைவரும் தங்களது பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அதிவேகமாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்றிருந்த புரசைவாக்கம் பிரிக்லின் ரோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ் வயது 20 என்பவரை தலை மற்றும் கையில் வெட்டினர். இதில் சதீஷ் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட சொட்ட மயங்கினார்.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய அந்த கும்பல், புரசைவாக்கம் சரவணப்பெருமாள் தெரு வழியாக சென்றது. அங்கு சாலையில் நின்றிருந்த பெரம்பூர் சடையப்பன் தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் வயது 30 மற்றும் புரசைவாக்கம் சரவண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் வயது 21 ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

அதனைத் தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. பாதிக்கப்பட்டவர்களை அருகிலிருந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயம்பட்ட மூன்று பேருக்கும் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தலைமைச் செயலக காவலர் குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அயனாவரம் உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் நேற்று பெரும்பாக்கத்தில் வைத்து பொதுமக்களை தாக்கிய முக்கிய குற்றவாளிகளான ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்கின்ற குள்ள கருப்பா 21. மற்றும் ஜெய்ருல்லா 19 ஆகிய இருவரையும் பிடிக்க முற்பட்டனர்.

அப்போது இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடி அங்கிருந்த ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தனர். அப்போது பிரசாந்துக்கு வலது கை மற்றும் இடது கால் உடைந்தது. இதேபோல ஜெய்ருல்லாவுக்கு வலதுகை உடைந்தது இருவரையும் மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரையும் தேடிவருகின்றனர்.

Updated On: 1 Feb 2022 4:19 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!