பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தேசிய லீக் கட்சி மாநில தலைவர் கைது
இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம்
இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் மேகநாதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது முகநூல் பக்கத்தில் வந்த கட்டுரைப்பதிவு ஒன்றில் இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு பரவியுள்ள ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தை தடுக்கும் வகையில், காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூலை அறுக்கும் போராட்டத்தை தொடங்குவோம் என பேசியிருந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த பதிவு இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தடா ரஹீம் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அவரது செயல்பாடுகளை கருத்தில் கொண்டு தடா ரஹீம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யவும், அவரது இந்திய தேசிய லீக் கட்சியை தடை செய்யவும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீம் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினரிடையே வெறுப்புணர்சியை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு பேசின் பிரிட்ஜ் பகுதியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தடா ரஹீமிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu