சென்னை நந்தனம் சிக்னல் - சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் சிக்னல் - சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்
X
சென்னை, நந்தனம் சிக்னல் அருகில் 10 நாட்களுக்கு சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை, நந்தனம் சிக்னல் அருகில் 10 நாட்களுக்கு சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன் "யு டேர்ன் திருப்பம்" திரும்பி செல்ல வேண்டும்.


அதே போல, செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை-செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயாட்டோ ஷோரூம் முன் "யு திருப்பம்" திரும்பிச் செல்ல வேண்டும். மேலும், பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டோயாட்டோவுக்கு முன்னால் "யு டேர்ன் திருப்பம்" திரும்பி செல்ல வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!