திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்தம் தற்காலிகமாக மூடல்
திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 50% வாகன நிறுத்தம் பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில்ல நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, திருமங்கலம்மெட்ரோ இரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் 50% வாகனநிறுத்தம் பகுதி 20.01.2024 முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.
பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியைபயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன பயன்பாட்டாளர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu