/* */

தமிழக அமைச்சர்கள் இலாகா விரைவில் மாற்றம்?....பதவி பறிபோகுமா?

tamilnadu ministers department will change shortly? தமிழகத்தில் விரைவில் அமைச்சர்களின் இலாகாக்கள் மீண்டும் மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவைப்பட்டால் செயல்படாத அமைச்சர்களின் பதவி பறிப்பும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

தமிழக அமைச்சர்கள் இலாகா விரைவில் மாற்றம்?....பதவி பறிபோகுமா?
X

தமிழக அரசு தலைமைச் செயலகம்  (கோப்பு படம்)

tamilnadu ministers department will change shortly?

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடிக்கடி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள்,புகார்கள் என தொடர்ந்து வருகிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் அமைச்சர்களுக்கான இலாகாக்களை மாற்றி அமைப்பதோடு சரிவர செயல்படாத அமைச்சர்களின் பதவியைப் பறிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் அமைச்சர்களாக உள்ள 18 பேர் மீது உளவுத்துறையானது செயல்பாடுகளில் அதிருப்தி என முதல்வரிடம் அறிக்கை அளித்துள்ளது. மேலும் ஒன்பது அமைச்சர்கள் மீது கட்சியினரின் புகார்கள், அதிகாரிகள் புகார் என சென்றுள்ளது. உளவுத்துறையின் இந்த அறிக்கையால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்ததோடு மீண்டும் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

அண்மையில் தொழில்துறை சார்பில் வெளிநாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டார் முதல்வர்ஸ்டாலின். இந்த நேரத்தில் தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் முதல்வரை வருத்தமடையச் செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் யாரை நம்பி பொறுப்புகளை ஒப்படைத்தாரோ அவர்கள் மீதே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ,புகார்கள் என வந்துள்ளதால் அவரை நிலைகுலைய வைத்துள்ளது.

அடுத்த ஆண்டு 2024 ல் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் இதுபோல் தமிழக மக்களிடம் அதிருப்தி நிலவி வரும் பட்சத்தில் கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுவதோடு தேர்தல் வெற்றியும் பாதிப்படையும் என கருதி கட்சி மற்றும் அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களை செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

பள்ளிக்கல்வி்த்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் மீது அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிர்வாக செயல்பாடுகளில் அதிருப்தி நிலவி வருகிறது. தஞ்சையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் மீது தற்போதைய அத்தொகுதி எம்எல்ஏ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் முதல்வருக்கும் புகார் சென்றுள்ளது. நிர்வாகிகளிடம் அமைச்சர் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை. இப்படி இருந்தால் எப்படி ? என எம்எல்ஏ கேள்வி கேட்டுள்ளார்.

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருவாய்த்துறையினர் நடத்திய அதிரடியால் தமிழகத்தில் பல இடங்களில் பரபரப்பானது. கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அமைச்சர் சார்ந்துள்ள திமுகவுக்கு பெயர் கெட்டுப்போகும் அளவுக்கு தேசிய அளவில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் காரணம் காட்டி திமுகவில் உள்ள பல மூத்த அமைச்சர்கள் அவரிடம் உள்ள இரண்டு வளம் கொழிக்கும் துறையில் எதையாவது கைப்பற்றிவிட வேண்டும் என தலைமைக்கு உசுப்பேத்தி உள்ளனர்.

அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் திடீரென மாநகர பேருந்துகள் நிறுத்தம் செய்ததால் மக்கள் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர். இதனால் போக்குவரத்து ஊழியர் சங்கங்களோடு அமைச்சர் சரிவர பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் இதுபோல் போராட்டம் நடந்திருக்காது .அதேபோல் திமுக தொழிற்சங்க தலைவருக்கும் அமைச்சருக்குமான உறவுகள் சரிவர இல்லாததால்தான் இந்த பிரச்னை என கணித்துள்ளனர்.

விழுப்புரத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் பலர் பலியாகினர். இதனால் அமைச்சர் மஸ்தான் மீது தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள்.

மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுமே வராத நிலையில் அவர் மீது ஒரு சில குற்றச்சாட்டுகள் வந்துள்ளது பெரும் அதிர்ச்சிதான். அதாவது சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுாரிக்கு ஜெயலலிதாவின் ஆதரவு டாக்டரை முதல்வராக நியமித்த விவகார் அவருக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் கட்டமைப்பு வசதி குறைபாடு சரிவர செய்யாததால் 3 மருத்துவக்கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. மேலும் சுகாதாரத்துறையானது செயலற்று இருப்பதாகவும், கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய பாம்புக்கடி மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் சரிவர சப்ளை செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முந்தைய தமிழக நிதி அமைச்சராக இருந்த தியாகராஜன் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் அமெரிக்காவில் தனதுகுடும்பத்தாரோடு நேரம் செலவழிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் அந்த முடிவை அறிவிக்கும் பட்சத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்று அமைச்சரை முதல்வர் நியமித்தாக வேண்டும். அதுவும் இந்த மாற்றத்தில் நடக்குமா?

மேலும் அமைச்சர்களைக் கண்காணிக்கும் உளவுத்துறையானது 18 அமைச்சர்கள் சரிவர செயல்படாமல் இருப்பதாகவும், 9 அமைச்சர்கள் மீது அதிகாரிகள் மற்றும் கட்சித்தொண்டர்கள் நிர்வாகிகள் என பலதரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள்,புகார்கள் என அடுக்கடுக்காக வந்துள்ளது.

அண்மையில் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து தமிழகம் திரும்பியுள்ள முதல்வர் பிசி ஷெட்யூலில் இருப்பதால் விரைவில் அமைச்சர்களுடைய இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகவும், தேவைப்பட்டால் அமைச்சர்களிடமிருந்து பதவி பறித்து வேறு புதிய நபர்களுக்கு வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

2024ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் திமுக 39 தொகுதிகளிலும் புதுவையில்உ ள்ள ஒரு தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. இந்நிலையில் இதுபோல் குற்றச்சாட்டுகள், புகார்கள் என தொடர்ந்து வந்தால் மக்களாகிய வாக்காளர்கள் ஆளும் கட்சி மீது அதிருப்தி அடைவார்கள் என்பதால் விரைவில் தமிழக முதல்வர் அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றுவதோடு மட்டும் அல்லாமல் உட்கட்சியிலும் சில அதிரடி மாற்றங்களை அறிவிப்பார் என ஆளும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Jun 2023 8:03 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்