சென்னையில் ஆளுநரை சந்தித்தார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

சென்னை ஆளுநர் மாளிகை(கோப்பு படம்)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தார்
பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பாஜகவின் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையின் அடிப்படையில், பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் சென்னையில் அமைந்துள்ள பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 16 ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த அண்ணாமலைக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் இருந்து இன்று வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு அண்ணாமலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு மலர்கொத்து வழங்கினார். அவருக்கு பன்வாரிலால் புரோஹித் வாழ்த்துக்களை தெரிவித்தார். சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்க ஆளுநர் மாளிகையில் வேறு வாயில் வழியாக சென்றுவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu