தமிழ்நாடு சட்டமன்றம் நூற்றாண்டு கொண்டாடுகிறது-கடந்து வந்த பாதை தெரியுமா

தமிழ்நாடு சட்டமன்றம் நூற்றாண்டு கொண்டாடுகிறது-கடந்து வந்த பாதை தெரியுமா
X

புனித ஜார்ஜ் கோட்டை

நாடு முழுவதும் பரவிய பல புரட்சிகர சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்ட இடம் தமிழ்நாடு சட்டமன்றம். வியத்தகு வரலாறும், சீரிய பெருமையும் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றம் பழம்பெருமையும் கொண்டது.

தமிழ்நாடு சட்டமன்றம் நூற்றாண்டு கொண்டாடுகிறது-கடந்து வந்த பாதை தெரியுமா

தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது.


நாடு முழுவதும் பரவிய பல புரட்சிகர சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்ட இடம் தமிழ்நாடு சட்டமன்றம். வியத்தகு வரலாறும், சீரிய பெருமையும் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றம் பழம்பெருமையும் கொண்டது.

இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது இது 18ம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தொடக்கத்தில் இது கீழவை மற்றும் மேலவை என்று ஈரவைகளாக செயல்பட்டது. 1986 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரனால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். தற்போது உள்ளது 16 வது சட்டப் பேரவை ஆகும்.


சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் இருந்தே சட்டமன்றம் செயல்பட்ட பெருமை கொண்டது தமிழக சட்டமன்றம். 1920 ஆம் ஆண்டே தேர்தலை சந்தித்த மன்றம் தமிழக சட்டமன்றம். சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்றம் 1921 ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் விலிங்டன் பிரபு தமிழக சட்டமன்றம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டது.

முதல் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நடத்தப்பட்டநிலையில், 1923, 1926, 1930 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த தேர்தல்கள் நடத்தப்பட்டன. பெண்கள் தேர்தலில் வாக்களிக்க 1920 ல் தடை இருந்தது. சட்டத்தின் இந்த பிரிவை நீக்கி பெண்களுக்கும் வாக்களிக்க வகை செய்யும் தீர்மானம் 1921 ஏப்ரல் 1 ஆம் தேதி சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. எனினும் 1923-ல் தான் இது நடைமுறைக்கு வந்தது. இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் 1926 முதல் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும், நியமிக்கப்படவும் தகுதி பெற்றனர்.

தமிழக சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி, 1937 முதல் சென்னை உள்ளிட்ட மாகாணங்களில் ஈரவைகளை கொண்ட சட்டமன்றங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவை சட்டமன்றப் பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை என்று அழைக்கப்பட்டன. 1952-ல் நடைபெற்ற தேர்தலில் வயது வந்த அனைவரும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் தமிழக சட்டமன்றத்தின் முதல் நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியன், 1957-58 ல் முதல்முறையாக பட்ஜெட் உரையாற்றினார்.

1986-ல் எம்ஜிஆரால் மேலவை கலைக்கப்பட்ட நிலையில், ஓரவை மன்றமாக தமிழ்நாடு சட்டப்பேரவை மாறியது. தேவதாசி முறை ஒழிப்புச்சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, இடஒதுக்கீடு, நில அரசுகளுக்கும் கொடியேற்றும் உரிமை, மாநிலப்பெயர் மாற்றம், இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற புரட்சிகளுக்கு வித்திட்ட இடம் தமிழ்நாடு சட்டமன்றம்.

ஆட்சி கலைப்புகள், குடியரசு ஆட்சி நிறுவப்பட்ட நிகழ்வுகள், சர்ச்சைகள், வாக்குவாதங்கள், வெளிநடப்புகள், கூச்சல் குழப்பங்கள் என எத்தனை எத்தனையோ அசாதாரண சம்பவங்களும் இங்கு அரங்கேறியிருக்கின்றன. நூறாண்டுகளை புரட்டிப்பார்க்கும்போது தமிழ்நாடு சட்டமன்றம் கடந்து வந்திருக்கும் பாதை முழுவதும் வரலாற்றின் முக்கிய தடங்கள் பதிந்து நிறைந்திருக்கின்றன. நூற்றாண்டு காணும் தமிழ்நாடு சட்டமன்றம் பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய மையமே.

தெரிந்த சட்டமன்றம்... தெரியாத தகவல்கள்


தமிழ்நாடு சட்டமன்றம் புனித ஜார்ஜ் கோட்டை, சென்னையில் தற்போது உள்ளது. 1921-37 ஆண்டுகளின் போது, சட்டமன்றத்தின் முன்னோடி சபை, கோட்டைக்குள் இருக்கும் சபை அறையில் (council chambers) கூடியது. அண்ணா சாலை, அரசு எஸ்டேட் வளாகத்தில் உள்ள சட்டசபை செனட் ஹவுசில் (senate house) 14 ஜூலை, 1937 ம் ஆண்டு 21 டிசம்பர் தொடங்கி 1938 வரையும், ஜனவரி 27, 1938 -26 அக்டோபர் 1939 காலகட்டத்தில் விருந்து மண்டபத்திலும் (பின்னர் ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றம் பெற்றது) கூடியது.

1946-52 போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் கூடியது. 1952ல், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆன பின், அரசாங்கத்தின் எஸ்டேட் வளாகத்தில் உள்ள தற்காலிக இடத்திற்கு நகர்த்தப்பட்டது. அப்போதைய சட்டமன்ற கட்டிடம் 260 பேர் மட்டுமே அமரும் படி இருந்ததால் மார்ச் 1952 ல் இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. பின்னர் 3 மே 1952 அன்று அதே வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்திற்கு நகர்ந்தது.

கலைவாணர் அரங்கம்

இப்புதியகட்டிடத்தில் (பின்னர் "கலைவாணர் அரங்கம்," எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கட்டிடம்) 1952-56 இல் செயல்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டமன்றத்தின் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. அதனால் சட்டமன்றம் 1956ல் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது. 2004 இல் 12வது சட்டமன்றத் தொடரின் போது, ஜே. ஜெயலலிதாவின் அதிமுக அரசு முதலில் ராணி மேரி கல்லூரிக்கும், பின்னர் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கும் சட்டமன்றத்தை மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இவ்விரண்டு முயற்சிகளையும் பொதுமக்களிடையே எதிர்ப்பேற்பட்டதால் அவை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன. 13 வது சட்டமன்றத் தொடரின் போது, மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் சட்டமன்ற மற்றும் அரசு தலைமைச் செயலகத்தை மாற்ற ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்தது. 2007 இல், ஜெர்மன் கட்டடக்கலை நிறுவனம் ஜிஎம்பி இண்டெர்நேசனல் புதிய சட்டமன்ற வளாகத்தை வடிவமைத்துக் கட்டும் போட்டியை வென்றது.


கட்டுமானம் 2008 ம் ஆண்டு தொடங்கி 2010 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. மார்ச் 2010 இல் புதிய கட்டிடம் துவக்கப்பட்டு செயல்பாட்டை தொடங்கியது. 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பிறகு, சட்டசபை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!