தமிழக தொழில் துறை பெயர் மாற்றம் – அமைச்சர் தங்கம் தென்னரசு

தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் பேசுகையில், தொழில் துறையை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். மாநில அளவில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையகரகம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழில்நுட்ப பூங்கா 3,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,700 கோடியில் உருவாக்கப்படும். சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும். கடத்தலை தடுக்க வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழை சிறப்பாக உச்சரிக்கும் செய்தி ஊடகங்களுக்கு ரூ.5 லட்சத்துடன் விருது வழங்கப்படும். அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். தமிழ் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் போட்டிகள் நடத்த ரூ.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu