தமிழக அரசு கலைக்கல்லுாரிகளில் பி.ஏ. தமிழில் சேர குவிந்த விண்ணப்பங்கள்

தமிழக அரசு கலைக்கல்லுாரிகளில்  பி.ஏ.  தமிழில் சேர குவிந்த விண்ணப்பங்கள்
X

தமிழக  அரசு கலை ,அறிவியல் கல்லுாரிகளில்  மாணவர்களுக்கான கவுன்சிலிங்  நடந்தது. (மாதிரிபடம்)

  • Govt Arts College - தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கலைக்கல்லுாரிகளில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டைப்பொறுத்தவரை பி.ஏ. தமிழ் பாடத்தில் சேர மாணவர்கள் அதிக விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

Govt Arts College - சிறப்பு செய்தி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு கலைக்கல்லுாரிகளில் சேர விண்ணப்பம் வழங்கப்பட்டு அதனை சமர்ப்பிப்பதறகான கால கெடுவும் ஆண்டு தோறும் அரசு சார்பில் அறிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான மாணவர்கள் அரசு கலைக்கல்லுாரிகளில் விண்ணப்பித்த பின்னர் கவுன்சிலிங் வரை காத்திருக்காமல் தனியார் கல்லுாரிகளில் சேர்ந்து வகுப்புகளுக்கு செல்கின்றனர். பின்னர் கவுன்சிலி்ங்கில் இடம் கிடைத்துவிட்டால் தனியார் கல்லுாரியிலிருந்து விலகி விடுகின்றனர். இது ஆண்டு தோறும் நடக்கும் வாடிக்கையான செயல்பாடு.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை 5 ந்தேதியிலிருந்து அரசு கலைக்கல்லுாரிகளில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கலைக்கல்லுாரிகளிலும் சிறப்பு பாட பிரிவு, மற்றும் கலை அறிவியல் பாடங்களுக்கான தனித்தனியாக முதற்கட்டமற்றும்இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கானது நடந்து வருகிறது.

தமிழகத்தினைப்பொறுத்தவரை ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அனைத்து குரூப்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்வு எழுதிய பின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமனங்களும் நடந்து வருவதால் தற்போது போட்டி தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.

மேலும் குரூப்.1 , 2 மற்றும்குரூப் 4 தேர்வுகளில் தமிழ் பாடத்திலிருந்து அதிக வினாக்கள் கேட்கப்படுகிறது. இதுமட்டும் தமிழக போலீஸ் தேர்விலும் மொழியியல் பாடமாக தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுவதால் இந்த ஆண்டு தமிழ் மற்றும் மொழியியல் பாடத்தில் சேர அதிக இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளையும் தமிழ் மொழியில் எழுதலாம் என்ற விதி உள்ளதால் தமிழ் பாடத்திற்கு தற்போது மதிப்பு அதிகரித்துள்ளது.

அதிக விண்ணப்பம்

தமிழகத்திலுள்ள அரசு கலைக்கல்லுாரிகளில் இளங்கலை தமிழ் மற்றும் மொழியியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு அதிகம் வந்துள்ளதாக கல்லுாரி முதல்வர் ஒருவர் தெரிவித்தார். அவர்கூறியதாவது, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் தமிழ் பாட பிரிவுகளில் சேர அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது ஒரு கல்லுாரிக்கு இளங்கலை விண்ணப்பங்கள் 3500 வந்துள்ளது என்றால் அதில் 1500 விண்ணப்பங்கள் இளங்கலை தமிழுக்கு வந்துள்ளது. அதன்பின்னர்தான் மற்ற பாடங்களான கம்ப்யூட்டர் சயின்ஸ்,வேதியியல் , வணிகவியல், போன்ற பாட பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

போலீஸ் தேர்வில் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த தேர்வின் விடைத்தாள் திருத்தப்படும் என்ற நடைமுறை உள்ளதால் தமிழ் பாடத்தில் சேருவோர் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. தமிழ் பாடத்தோடு அறிவியல் ,கணிதம் , பொதுவரலாறு, பொது அறிவு உள்ளிட்ட பிரிவுகளின் வாயிலாகவும் கேள்வி கேட்கப்படுவதால் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு தற்போது தமிழகத்திலுள்ள அரசு கலைக்கல்லுாரிகளில் தமிழ் பாடத்தில் சேர ஆர்வம் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

ஆர்வம் அதிகரிப்பு

இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே டிஎன்பி்எஸ்சி குரூப் 4 தேர்வினை ஒரு சில மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் உயர் வகுப்பினை தபால்வழியில் படித்துகொள்கின்றனர். மேலும் டிகிரி முடித்தவர்களுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுத பல மாணவர்கள் விரும்புவதாலும் தற்போது தமிழ் பாடத்தில் சேர்வதற்கான வேட்கை அதிகரித்துள்ளது. இ்தன் காரணமாகவே தமிழகத்திலுள்ள அரசு கலைக்கல்லுாரிகளில் பெரும்பாலும் பி.ஏ., தமிழ் மற்றும் பி.ஏ., மொழியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story