முதன்முறையாக தனிக்காட்டு ராணியாக வந்து வாக்களித்த சசிகலா

முதன்முறையாக தனிக்காட்டு ராணியாக  வந்து வாக்களித்த சசிகலா
X

தி நகர் வாக்கு சாவடியில் வாக்களித்து விட்டு வரும் சசிகலா 

சென்னை தி. நகரில் உள்ள வாக்கு சாவடியில் முதன்முறையாக தனியாக வந்து வாக்களித்த சசிகலா

சென்னை தியாகராயநகரில் உள்ள வித்யோதயா பள்ளி வாக்குச்சாவடியில் வி.கே.சசிகலா வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம், வாக்களித்திருக்கிறேன். இந்தமுறைதான் ஜெயலலிதா இல்லாமல் முதன் முறையாக தனியாக வந்து வந்து வாக்களிக்கிறேன். அதை நினைத்துக்கொண்டே வந்தேன்.

இந்த அரசைப் பொறுத்தவரை, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். இது தமிழக அரசு நடத்தும் தேர்தல். எனவே ஆளுங்கட்சியினர், அராஜகம் செய்யக்கூடாது. காவல்துறையும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்

Tags

Next Story
ai marketing future