கறைபடியாத கரங்கள்: துாய்மை பணியாளர்களின் நேர்மை

கறைபடியாத கரங்கள்: துாய்மை பணியாளர்களின் நேர்மை
X
துாய்மை பணியாளர்களின் நேர்மையை பாராட்டி சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கினர்.

சென்னை, அடையாறு, கஸ்துாரி பாய் நகரில், பழனியம்மாள், சமீபத்தில் துாய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, சாலையில், ரூ.50 ஆயிரம் ரூபாயுடன் பணப்பை கிடந்தது.அதை எடுத்த பழனியம்மாள், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன், உரியவரிடம் ஒப்படைத்தார்.

அதேபோல், கோடம்பாக்கம் அனுமான் சாலையில் துாய்மை பணி மேற்கொள்ளும்போது, சாலையில் கிடந்த, ரூ.20 ஆயிரம் ரூபாயை, துாய்மை பணியாளர் எடிசன், உரியவரிடம் ஒப்படைத்தார். இவர்களின் நேர்மையை பாராட்டி, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ரிப்பன் மாளிகை அழைத்து சான்றிதழ்களை வழங்கினார்.அப்போது மாநகராட்சி துணை கமிஷனர் மணீஷ் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!