நாளை ஆடிப்பூர விழா .. தமிழக கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பூர நன்னாளில் வளையல் அலங்காரத்தில் அம்மன் (பைல்படம்)
உலக மக்களை இன்னல்களிலிருந்து காப்பதற்காக அம்பாள் சக்தியின் உருவாக அவதரித்ததினம் ஆடிப்பூரம் ஆகும். வைணவம் போற்றும் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்த நாள் என்ற சிறப்பு மிக்க நாள்தான் ஆடிப்பூரம்.
தமிழகத்தில் இன்று ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை அனைத்து கோயில் நிர்வாகமும் சிறப்பாக செய்து வருகின்றன. சிவாலயங்களில் மட்டுமல்லாமல் பெருமாள் கோயில்களிலும் ஆடிப்பூரம் கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டாள் உமாதேவி அவதரித்த அற்புதமான திருநாள் ஆடிப்பூரம்.
ஆடிமாதத்தில் வரக்கூடிய பல்வேறு விசேஷங்களில் முக்கியமான திருவிழாதான் இந்த ஆடிப்பூரம். இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுகிறது. அம்மன்களுக்கு உரிய திருநாளாகவும் அ ம்மன் அவதரித்த திருநாளாகவும் நம்பப்படுகிறது.
ஆடிமாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நன்னாளில் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.உலக மக்களை இன்னல்களில் இருந்து காப்பதற்காக அம்பாள் சக்தியின் உருவாக அவதரித்த தினம் ஆடிப்பூரம்.இந்த ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாமல் வைணவ கோயில்களிலும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படக்கூடிய விழாவாகும். இன்று பிற்பகல் இரண்டரை மணிக்கு மேல்தான் பூரம் நட்சத்திரம் ஆரம்பிக்கின்றது.அதனால் ஆகஸ்ட் ஒன்னாம்தேதியான நாளை ஆடிப்பூரம் மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட உள்ளது.
இத்திருநாளில் திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் ஆண்டாளை வழிபட்டால் அவர்களுக்கு நல்ல வரன் அமைந்துவிரைவில் திருமண யோகம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
அம்மனுக்கு வளையல் அலங்காரம்
திருமணமான பெண்களுக்கு எப்படி வளைகாப்பு நடத்துகிறோமோ? அதேபோல் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி பக்தர்கள் அனைவரும் மகிழ்ந்திடும் நாளே இந்த சிறப்பு மிக்க ஆடிப்பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் அனைத்தும் மங்கயைர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த ஆடிப்பூர திருவிழாவையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கி தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்துகொண்டால், மனம்போல்மாங்கல்யம் அமையும். மங்களங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும்.
ஒவ்வொரு பெண்ணின் வடிவிலும் அம்பிகையின் லட்சுமி கடாட்சம் அமைந்துள்ளதால் ஆடிப்பூரத்தன்று எந்தவித பேதமின்றி தம்மால் இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத்துணி, புடவை, என்று அவரவர்களால் இயன்ற மங்கள பொருட்களை வாங்கி தந்தால் இல்லறம் சிறக்க செய்யும். இன்பங்கள் நிறைய கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகும்.
ஆடிப்பூர திருவிழா மாநிலத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் வாகன சேவையுடன் பத்து நாட்கள் திருவிழாவாக நடக்கும். திருவாரூர் கமலாம்பாள், நாகை நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பராட்சாம்பிகை, போன்ற திருத்தலங்களில் பத்து நாட்கள் பிரம்மோற்சவமும், திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும்நடக்கிறது. மேல்மருவத்துார் ஆதிரபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் நிகழ்ச்சியானது சிறப்பாக நடக்கிறது.
அம்மன் கோயில்களுக்கு செல்லமுடியாத சூழலில் உள்ள பெண்கள் தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு பட்டு வஸ்திரம், வளையல் பூக்கள் நைவேத்யம் செய்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.
அன்னைக்கு பிரசாதமாக பானகம், நீர்மோர், சர்க்கரைப்பொங்கல், கூழ், ஆகியவற்றை நைவேத்யம் செய்து வேண்டிக்கொண்டால் வாழ்க்கையில் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu