ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரசிகர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
X
போயஸ் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை ஸ்டூல் போட்டு எட்டிப் பார்த்து வாழ்த்து தெரிவிச்சார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை போயஸ் இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை வீட்டில் ஸ்டூல் போட்டு எட்டிப் பார்த்து வாழ்த்து தெரிவிச்சார் நடிகர் ரஜினிகாந்த்.

பண்டிகைக் காலங்களில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்தால் வீட்டிற்கு வரும் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க, போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இன்று காலை முதல் திரண்டு நின்றனர்.

தனது வீட்டுக்கு முன்பு நின்று இந்த ரஜினிகாந்த் அவரது வீட்டின் கேட் முன்பு நாற்காலி போட்டு அதன் மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு கையை மட்டும் அசைத்து சென்றார். ரசிகர்கள் சிலர் கொடுத்த புத்தகத்தையும் பெற்றுக் கொண்டார். ரஜினியை பார்த்த மகிழ்ச்சியில், ரசிகர்கள் தலைவா, தலைவா என கோஷம் எழுப்பினர்.

சில வினாடிகள் மட்டுமே வீட்டின் கேட்டின் பின்புறம் நின்று ரசிகர்களை சந்தித்து கையசைத்த நடிகர் ரஜினிகாந்த் பின் வீட்டுக்குள் சென்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!