அக்னிநட்சத்திரம் துவக்கம்..... வெப்பத்தின் கொடுமையிலிருந்து தப்பிக்க இயல்பு வாழ்க்கை பாதிப்பு:பகலில் ரோடுகள் வெறிச்.....
அக்னிநட்சத்திரம் துவங்கிவிட்டதுங்க...இனி தினமும் வெயில் செஞ்சுரி தான் (கோப்பு படம்)
summer season, agni nakshatra started
அக்னிநட்சத்திரம் என்பது கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றம் ஆகும். அதாவது இது சுமார் 24 அல்லது 25 நாட்களுக்கு ஏற்படும். இந்த கால கட்டத்தில் வழக்கத்தினை விட வெயிலின் அளவு அதிகமாக இருக்கும். அக்னிநட்சத்திரம் துவங்கி விட்டாலே மக்கள் உஷாராகி வெளியில் வருவதைக் குறைத்துவிடுவர் பகல் நேரத்தில். காலை அல்லது மாலை நேரங்களில் அவர்களுடைய உலா இருக்கும்.
தமிழகத்தினைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலம் என்பது ஏப்ரலில் துவங்கி ஜூனில் முடிவடையும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்திலேயே கோடைக்காலம் துவங்கிவிட்டது போல் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் புழுக்கம் இந்த பிப்ரவரி மாதத்திலேயே துவங்கி விடுவதால் பிப்ரவரி முதல் ஜூன் வரை 5மாதங்கள் வெயிலினால் பாதிப்படையும் சூழ்நிலையே தற்போது உருவாகி உள்ளது.
summer season, agni nakshatra started
summer season, agni nakshatra started
இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது மே மாதத்தில்தான் அக்னிநட்சத்திரம் ஆண்டுதோறும் துவங்கி முடியும். இந்த ஆண்டினைப் பொறுத்தவரை மே 4 ந்தேதி துவங்கி மே 29 ந்தேதியோடு நிறைவடைகிறது. கோடைக்காலம் என்பதே கொடுமை. அதாவது இயற்கையின் சூடு அதிகம். இதில் புற்றீசல் போல் பெருகி வரும் வாகனப்புகை வேறு, பின்னர் நாம் வீடுகளில் பயன்படுத்தும் ஏ.சி,. மற்றும் ரெப்ஜிரேட்டரின் அனல் , தொழிற்சாலைகளின் இயந்திரங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் வெப்பம், பாய்லர் வெப்பம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வெப்பமெல்லாம் சேர்ந்தால் நம்மால் வீடுகளில் இருக்கவே முடிவதில்லை.
அக்னிநட்சத்திரம் என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பஞ்சாங்கப்படி ஞாயிறு (சூரியன்) பரணி விண்மீன் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கிருத்திகை மீன்முழுவதும் வலம் வரும் கால கட்டமாகும். சூரியன் மேஷ ராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னிநட்சத்திரம் எனப்படுகிறது.
summer season, agni nakshatra started
summer season, agni nakshatra started
அர்ச்சுனன் காண்டாவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் எனக்கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி ஆண்டுதோறும் அக்னிநட்சத்திரமானது 21 நாட்கள் இருக்கும். இவை மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் 7 நாட்கள் வெப்பத்தின் அளவு மெதுவாக அதிகரிக்க துவங்கும். இடைப்பட்ட ஏழு நாட்களில் வெப்பத்தின் பாதிப்பு கடுமையாக இருக்கும். பின்னர் மூன்றாவது பாகமான கடைசி 7 நாட்களில் வெப்பத்தின் அளவு குறைந்து இயல்பு நிலைக்குத்திரும்பும் என கூறுகின்றனர்.
27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்துக்கும் அக்னி நட்சத்திரம் என்ற பெயர் கிடையாது. ஆனாலும் சித்திரை மாதம் பரணி 3ம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னிநட்சத்திரக் காலம் என தமிழ்ப்பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது.
summer season, agni nakshatra started
summer season, agni nakshatra started
செய்யக்கூடாதவை?
அக்னிநட்சத்திரம் துவங்கிவிட்டாலே ஒரு சில சுப காரியங்களைத் தவிர்த்துவிடுகின்றனர். அந்த வகையில் வீடு கட்ட ஆரம்பிப்பது, மற்றும் அதற்கான கிணறு வெட்டுதல், பூமிபூஜை செய்வது, விவசாய விதைப்பு வேலைகள், மரம்வெட்டுதல், குழந்தைகளுக்கு காது குத்தி மொட்டையடித்தல், கிரகப்பிரவேசம், பந்தல்கால் நடுவது, தெய்வத்திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வது போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது.
திருமணம் செய்யலாமா?
அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண்பார்த்தல், உபநயனம், ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம்.
தகிக்கும் வெயில்...
ஏங்க கோடைக்காலந்தான். அதற்காக காலை 7மணி முதலே கொளுத்த துவங்கினால் மக்களின் நிலையைத்தான் கொஞ்சம் நினைத்துதான் பாருங்களேன். அதுவும் வாகனம் ஓட்டிச் செல்லும் இரு கைகளிலும் தீக்குச்சியை உரசினீர்கள் என்றால் பற்றிக்கொள்ளும். அவ்வளவு வெக்கைங்க.. இந்த வெக்கையை மறைப்பதற்காக ஒரு சில பெண்கள் டூவீலரை ஓட்டும்போது முழங்கை அளவு கிளவுஸ் போட்டுக்கொண்டுதான் செல்கின்றனர். அது அதைவிட ஆபத்துங்கோ... கை முழுக்க வியர்த்துவிடும். அதற்கு சாதாரணமாக சென்றால் காற்றாவது படும். எல்லாம் நாகரிகந்தான் போங்க.. என்ன சொல்ல..
சன் கிளாஸ்சேல்ஸ் அமோகம்..
கோடைக்காலத்தில் வெளியில் சென்றால் கண்களானது உஷ்ணத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள பெரும்பாலானோர் சன்கிளாஸ் பயன்படுத்துவர். இந்த கண்ணாடி எல்லாவிலையிலும் கிடைக்கிறதுங்கோ? அவரவர்களின் வசதிக்கு தகுந்தாற்போல் வாங்கி அணிந்துகொள்ளலாம். ஆனால் சாதாரண கறுப்பு கண்ணாடி போட்டு சுற்றினீர்கள் என்றால் உங்களுக்கு மெட்ராஸ் ஐதான் வந்துவிட்டது என பலர் கிட்ட வரமாட்டார்கள் பார்த்துக்கொள்ளுங்க...
இயற்கை விளைபொருட்கள் விற்பனை ஜோர்
கோடைக்காலம் என்றாலே நம் கண் முன் வருவது இளநீர்தான். இன்று இளநீரின் அடிப்படை விலையே ரூ. 30 முதல் ரூ. 40 ஆகி விட்டது. தேங்காய்களுக்கே பஞ்சம் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது. அவ்வளவு சேல்ஸ் ஆகிறது. மேலும் வெள்ளரிப்பிஞ்சு, மொலாம்பழம் , நுங்கு சேல்ஸ் பட்டையைக் கிளப்புகிறது. ஒரு நுங்கு ரூ. 5 என்றாகிவிட்டது பல இடங்களில் . பனை மரங்களே கண்களால் காண முடியவில்லை. அப்புறம் இந்த விலை விக்காதுங்களா? என்று கேட்பது காதில் விழுதுங்கோ...
summer season, agni nakshatra started
summer season, agni nakshatra started
குளிர்பானங்கள் ஐஸ்கிரீம் டாப் விற்பனை
என்னதான் இயற்கை என்றாலும் செயற்கை விற்பனையும்அதற்கு ஈடாகுதுங்கோ.. ஐஸ்கிரீம் பார்லரில் தினந்தோறும் விற்பனை களை கட்டி வருகிறது. கூல்டிரிங்ஸ் விற்பனையும் அதிகரித்துள்ளது. என்னதான் இருந்தாலும் எதை வாங்கினாலும் தயவு செய்து உற்பத்தி தேதி , காலாவதி தேதியைப் பார்த்து வாங்குங்க.. குடிச்ச பின்னர் பார்க்காதீர்கள். பொருட்களை வாங்கும் முன் அந்த தேதிகளைப் பார்த்து வாங்கி பயன்படுத்துங்கோ அது உங்களுக்கு உங்க ஆரோக்யத்துக்கு நல்லது.
பகலில் ரோடுகள் வெறிச்...
அக்னி நட்சத்திரம் துவங்கி விட்டதால் அதற்கு முன்பாகவே பகல் நேரங்களில் ரோடுகளில் ஒன்று இரண்டு பேர் மட்டுமே செல்வதைக் காணமுடிந்தது. தற்போது அக்னி துவங்கிவிட்டதால் பகல் நேரங்களில் வாகனங்கள் பொதுமக்கள் செல்வது குறைந்தே விட்டது என்று கூட செல்லலாம். டூவீலர்களில் செல்வோர் பெரும்பாலும் தங்களுடைய முக்கிய வேலைகளுக்கு மட்டுமே வெளியில் வருகின்றனர். மற்றபடி அவசரமில்லா வேலைகளை காலை 8 மணிக்கு முன்பாகவும் மாலை 6மணிக்குமேல் வெளியில் வந்து முடித்துக்கொள்கின்றனர். எனவே பொதுமக்களே தேவையிருந்தால் மட்டுமே வெளியில் வெயிலில் செல்லுங்கள்... அப்படி இல்லாவிட்டால் வெயில் இல்லாத நேரங்களில் வெளியில் சென்று உங்கள் வேலைகளை முடியுங்களேன்...இது உங்கள் ஆரோக்யம் பாதுகாக்கப்படும்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu