/* */

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை - அரக்கோணம் மற்றும் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது

HIGHLIGHTS

பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
X

சென்னை புறநகர் ரயில் - கோப்புப்படம் 

சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணி முதல் நாளை காலை 6.30 மணி வரையில் 14 மின்சார ரயில் சேவையை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மூர்மார்க்கெட்டிலிருந்து இன்று இரவு 10.35 மணிக்கு பட்டாபிராம் புறப்படும் புறநகர் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து இரவு 11.30, 11.45 மணிக்கு ஆவடி செல்லும் புறநகர் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டிலிருந்து நாளை காலை 4.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு காலை 4.30 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு 5.30 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு 5.40 மணிக்கு புறப்படும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 44 மின்சார ரயில்களின் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், தாம்பரம்-கடற்கரை இடையிலான சேவை காலை 10.05 மணி முதல் மதியம் 3.30 மணி வரையும், செங்கல்பட்டு-கடற்கரை இடையிலான ரயில் சேவை காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, மதியம் 12.30, 12.50, 1 மணி, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும். மறு மார்க்கமாக காலை 9.40, 10.20, 10.55, 11.30, மதியம் 12 மணி, 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On: 7 Oct 2023 3:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?