வேலை நிறுத்தம்: ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையாளர்

வேலை நிறுத்தம்: ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையாளர்
X
வேலை நிறுத்தம் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தையொட்டி பயணிகளிடமிருந்து அதிக பணம் வசூலிக்க கூடாது எனவும், அவ்வாறு வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை பெருநகர காவல்த்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது:

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, மத்திய மற்றும் மாநில அரசு தொழிற்சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் 28.03.2022 மற்றும் 29.03.2022 ஆகிய 2 நாட்கள் இந்தியா முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. அதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்வ்உத்தரவின்பேரில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நிறுத்தத்தையொட்டி, சென்னையில் இரயில் பேருந்து, ஆட்டே உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் குறைந்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதியுற்றனர்.

இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி, பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள்,ஆட்டோக்கள், பயணிகள் ஆட்டோ பொதுமக்களிடம் அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்ததையொட்டி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி. சராட்கர், தலைமையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சென்னையிலுள்ள, சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட இரயில் நிலையங்கள், கோயம்பேடு மற்றும் இதர பேருந்து நிலையங்களில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு நேரில் சென்று அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் வேலை நிறுத்தத்தையொட்டி போக்குவரத்து சேவைகள் குறைத்துள்ளதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அதிக கட்டணம் வசூலித்ததாக பொதுமக்கள் கொடுத்த புகார்களின் பேரில், சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.ஆகவே. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ. ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து பொதுமக்கள் காவல் அவசர எண்.100 மற்றும் போக்குவரத்து அவசர உதவி எண்.103 போக்குவரத்து காவல் வாட்சப் எண் 9003130103 மற்றும் சென்னை பெருநகர காவல். சமூக வலைதளங்களில் புகார்கள் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!