திருமண விழாவில் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்

திருமண விழாவில் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.4.2022) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன் குமாரின் மகன் வினோத்குமார் - ரேவதி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.

உடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

Tags

Next Story