சென்னை தீவுத்திடலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

சென்னை தீவுத்திடலில் இன்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்
சென்னை தீவுத்திடலில் இன்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம்நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து திருக்கல்யாண வைபவத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குது. முடிஞ்சவங்க கலந்துக்கலாம்
சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம்சார்பில் கடந்த 2008-ம்ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி நிவாசதிருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மீண்டும் தீவுத்திடலில்...
இந்தசூழலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைதீவுத்திடலில் இன்று மாலை 7 மணி அளவில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதையொட்டி பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக ஆங்காங்கே 10 பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீவுத்திடல் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை வேத பாராயணம் நடைபெற உள்ளது. இரவு 7 மணியளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்காக உற்சவர் சுவாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. பண்டிதர்கள் திருமலையில்இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் இலவசமாகக் காணலாம். இதுமட்டுமின்றி, திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்கு பிரசித்தி பெற்ற லட்டு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்கு சிறப்புஏற்பாடுகளை விழா ஏற்பாட்டாளர்கள் செஞ்சிருக்காய்ங்க
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu