ரம்ஜான் நாளில் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு..! நெகிழ்ச்சியில் நெட்டிஷன்கள்! இதான் தமிழ்நாடு..!
உலகம் முழுக்க ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவில் இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகைகள் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் ரம்ஜான் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை அறிந்த நெட்டிஷன்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிலும் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்வு அனைவரையும் மதங்களைத் தாண்டி மனிதமே சிறப்புரும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகை ரம்ஜான். ரம்ஜான் மாதத்தில் மாதம் முழுக்க நோன்பு இருந்து புனித கடமையை ஆற்றுவார்கள். பகல் நேரங்களில் சாப்பிடாமல் நோன்பு இருந்து இரவில் சாப்பிட்டு நோன்பு துறப்பார்கள். இது எல்லா ஆண்டுகளிலும் நிகழும் சிறப்பாகும். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பே சாப்பிட்டு, பின் விரதமிருந்து சாயங்காலம் சூரியன் மறைந்த பிறகு நோன்பு துறப்பார்கள்.
அதிகாலை அவர்கள் சாப்பிடும் உணவை சஹர் என்றும் மாலையில் நோன்பு திறப்பதை இப்தார் என்றும் அழைக்கிறார்கள். மார்ச் 11ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் இந்த நோன்பு கடைபிடிக்கின்றனர். இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து தொழுது வருகின்றனர். அனைவரையும் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு ரம்ஜானை கொண்டாடுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மத வேறுபாடு இன்றி, பிரியாணி வழங்கி கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ரம்ஜான் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள சர்ச் ஒன்றில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது புனித காணிக்கை அன்னை தேவாலயம். இங்குதான் ரம்ஜான் நாளில் இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீப காலங்களில் உலகம் முழுக்க மத வேறுபாடுகள் காரணமாக இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்போது, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்து வரும் சூழ்நிலையில், தமிழகம் எப்போதும்போல மதநல்லிணக்கத்துக்கு இலக்கணமாக திகழ்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu