கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள்

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த கரும்பு, மஞ்சள்
X

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்துள்ள கரும்புகள்

பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகை வருகிற 15m தேதி(திங்கட்கிழமை)கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரும்பு மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கி சென்றிட வசதியாக கோயம்பேடு மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் விதமாக மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலை மற்றும் மளிகை மார்க்கெட் வளாகம் என இரண்டுஇடங்களாக பிரிக்கப்பட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் கோயம்பேடு மார்கெட்டில் செயல்படும் பொங்கல் சிறப்பு சந்தைக்கு கரும்பு, மஞ்சள் கொத்துக்கள் அதிகஅளவு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளன.

நேற்று நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து 6-க்கும் மேற்பட்ட மினி வேன்கள் மூலம் மஞ்சள் கொத்து விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது.


இதனால் சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்துகளை தங்களது வாகனங்களில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

நாளை நள்ளிரவு முதல் விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவியும் எனவும், மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் விற்பனை பொருட்களும் ஏராளமான வாகனங்களில் குவியும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இன்று காலை சிறப்பு சந்தையில் 15 கரும்புகள் கொண்ட ஒருகட்டு கரும்பு ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒரே இடத்தில் பொங்கல் பொருட்கள் அனைத்தையும் எளிதாக வாங்கி சென்றிடும் வகையில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.வருகிற 17ம் தேதி வரை சிறப்பு நடக்க உள்ளது. காய்கறி மற்றும் பழ மார்கெட்டில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய பின்னர் மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் செயல்பட்டு வரும் சிறப்பு சந்தையில் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இதன் மூலம் மார்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறப்பு சந்தையில் குடி தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மார்கெட் வளாகத்தில் ஆங்காங்கே பொங்கல் சிறப்பு சந்தை நடக்கும் இடங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒலி பெருக்கி மூலம் சிறப்பு சந்தை பற்றி தகவல் தெரிவித்து வருகிறோம் என்று கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!