பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தேச நலனுக்கு எதிரானது : முதலமைச்சர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணி அளவில் கேள்வி நேரத்துடன் துவங்கியது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. பொருளாதார நலனுக்கும், சிறு,குறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன.
பொதுத்துறை நிறுவன சொத்துக்களை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu