உள்ளம் கவர் கள்வி சாய்பல்லவி பர்த் டே...

உள்ளம் கவர் கள்வி சாய்பல்லவி பர்த் டே...
X
நமக்கு பிடித்தால் எந்த துறைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்.

இன்னிக்கு உள்ளம் கவர் கள்வி சாய்பல்லவி பர்த் டே

மலையாளத்தில் வெளிவந்த "பிரேமம்" படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி தான் சாய் பல்லவி.இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்‌ஷித் ஆகியோரது டான்ஸ் வீடியோக்களை கண்டு டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், முறையாக டான்ஸ் பயிற்சி எடுத்துக் கொண்டதில்லையாக்கும்.

தனது வாழ்க்கையில் மருத்துவப் படிப்பை குறிக்கோளாக வைத்து படித்து வந்த இவர் இன்று பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இது போன்ற மாற்றங்களை தந்து நமக்கு பிடித்தால் எந்த துறைக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் அதற்கு முயற்சி மட்டும் போதுமென்று எல்லோருக்கும் புரிய வைத்துள்ளார்.இதே போன்று தெலுங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தீ அல்டிமேட் டான்ஸ் ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.ஓணம் பண்டிகையால் ஈர்க்கப்பட்ட சாய் பல்லவி, பூக்களால் ரங்கோலி வரையவும் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் கேரளாவைச் சேர்ந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாய் பல்லவி இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Tags

Next Story
ai in future agriculture