சேலம் புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சேலம் புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
X
கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனி விமானம் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் பணிகைளை பார்வையிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம், கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு செல்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார். காலை9.15 மணியளவில் சேலம் சென்றடைந்தார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகளுடன் கூடியற கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் சுகாதாரத்துறை, இரும்பாலை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார்.

சேலத்தில் தனது ஆய்வுப்பணியை முடித்துக்கொண்டு திருப்பூருக்கு செல்கிறார். அங்கு பல்வேறு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். அங்கிருந்து கோவை மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கும் தனது ஆய்வுப் பணியை மேற்கொள்கிறார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!