நீங்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள் அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா ;மோடி பேச்சு
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 42 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில் கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின்.
இன்று காலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம்பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கான எதிர்காலத்தை உங்கள் மனங்களில் ஏற்கனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள். எனவே இன்றைய தினம் சாதனைகளுக்கான தினம் மட்டும் அல்ல, முன்னேற்றத்திற்கான தினமும் ஆகும்.
கொரோனா பெருந்தொற்று நாம் இதுவரை காணாத சம்பவமாகும். ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு துயரங்களை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். , அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும். இந்தியாவில் அனைத்து துறைகளிலும் புதுமையான சுறுசுறுப்பு உருவாகியுள்ளது.
125 ஆண்டுகளுக்கு முன் மதராஸ் என்று அறியப்பட்ட இங்கு இந்திய இளைஞர்களின் சாத்தியங்கள் எவை என்பது குறித்த சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை நினைவில் கொள்வோம். ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள் இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் சிந்தனைகளும், மாண்புகளும் உங்களுக்கு எப்போதும் உந்துசக்தியாக இருக்கட்டும்.
தொழில்துறை, முதலீடு, புதிய கண்டுபிடிப்பு அல்லது சர்வதேச வர்த்தகம் என அனைத்திலும் இந்தியா முன்னிலையில் இருப்பதை காண முடிகிறது. கடந்த ஆண்டு இந்தியா உலகின் 2-வது பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்தது என்று தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்பு என்பது வாழ்க்கையின் நெறியாக மாறியிருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழில்களின் எண்ணிக்கை 15,000 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீட்டை இந்தியா பெற்று சாதனை படைத்துள்ளது. நமது புதிய தொழில்களும் கூட பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் சாதனை அளவாக நிதி ஆதாரத்தை பெற்றுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக சர்வதேச வர்த்தக ஊக்குவிப்பில் இந்தியாவின் நிலை முன்னெப்போதும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளது.
வலுவான அரசு என்பதன் பொருள் அது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது என்ற கருத்து ஏற்கனவே இருந்தது. ஆனால் இதனை நாங்கள் மாற்றியிருக்கிறோம். வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவதாகும். வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது. வலுவான அரசு என்பது அனைத்து தளங்களுக்குள்ளும் நுழைவது அல்ல, அது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டு மக்களின் திறமைகளுக்கு இடமளிப்பதாகும்.ஒரு வலுவான அரசின் பலம் என்பது அது அனைத்தையும் அறிந்திருப்பது அல்லது அனைத்தையும் செய்யமுடிந்தது அல்ல என்பதை அடக்கத்துடன் ஏற்பதில் உள்ளதுஇளைஞர்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் இடையேயான இணைப்பை பிரதமர் கோடிட்டு காட்டினார். "உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி. உங்களின் கற்றல், இந்தியாவின் கற்றல். உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu