மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு விரைவில் நிறைவேற்றப்படும் ;அமைச்சர் தகவல்

மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு  விரைவில் நிறைவேற்றப்படும் ;அமைச்சர் தகவல்
X
EB Reading Status - தமிழகத்தில் மாதந்தோறும் மின்கணக்கெடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. நேற்றுசென்னையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மின்துறை அமைச்சர் இது விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

EB Reading Status - சென்னை; தமிழக சட்டசபை தேர்தல் வாக்குறுதியாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட மாதந்தோறும் மின்கணக்கெடுப்பு நிச்சயம் விரைவாக நிறைவேற்றப்படும் என தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றவர்களுக்கு 'ஸ்மார்ட் மீட்டர் ' பொருத்தும் போது, அதற்கு மாதாந்திர வாடகை வசூலிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.சென்னை சைதாப்பேட்டையில் ரூ. 20 கோடி ரூபாய் செலவில் 140 இடங்களில் நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழாவில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, மழைக் காலங்களில், மின் வினியோகம் நிறுத்தப்படக் கூடாது என்பதற்காக, 1,681 'பில்லர் பாக்ஸ்'களின் உயரம், தரையில் இருந்து, 1 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது.இதுவரை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து சென்னையில், 294 கோடி ரூபாய் செலவில், 2,025 நவீன டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப் பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்த மாதந்தோறும் மின்கணக்கெடுக்கும் பணி விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story