அசோக் நகரில் திடீரென இடிந்து விழுந்த அரசு பள்ளி சுவர்: கார் சேதம்

அசோக் நகரில் திடீரென இடிந்து விழுந்த அரசு பள்ளி சுவர்: கார் சேதம்
X

இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.

சென்னை அசோக் நகர் 8வது தெருவில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ள எட்டு அடி உயரம் கொண்ட மதில் சுவர் அதிகாலையில் 25 அடி நீளத்திற்கு திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மின்சார பெட்டிகள், குப்பை சேகரிப்பு தொட்டிகள் என அனைத்தும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஏற்கனவே இதே பள்ளியின் பகுதி சுற்றுச்சுவர் முன்னதாக இடிந்து விழுந்த நிலையில், மீண்டும் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future