சென்னையில் டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 'காப்பு'
திருநாவுக்கரசர்
சென்னை, மடுவின்கரையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு, மது அருந்த திருநாவுக்கரசர் என்பவர் வந்துள்ளார். மது அருந்திவிட்டு அவர் கொடுத்த, ஐந்து, 500 ரூபாய் நோட்டுக்களை ஊழியர்கள் பரிசோதித்ததில் அவை கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
டாஸ்மாக் பாருக்கு விரைந்த போலீசார், கள்ள நோட்டுக்களை கொடுத்த நபரை காவல் நிலையம் அழைத்து. வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் வேளச்சேரியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், இவருக்கு ஆலந்துாரை சேர்ந்த மெகபூப் என்பவர் மூலமாக பணம் கிடைத்ததும் தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4000 மதிப்பிலான எட்டு, 500 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu