கிண்டியில் தொடரும் கள்ளநோட்டு வேட்டை: 4 பேர் கைது- 2,36,500 கள்ளநோட்டு பறிமுதல்

கிண்டியில் தொடரும் கள்ளநோட்டு வேட்டை: 4 பேர் கைது- 2,36,500 கள்ளநோட்டு பறிமுதல்
X

சென்னை  கிண்டி பகுதியில் கள்ளநோட்டு வேட்டையில் போலீஸாரார் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள்

கள்ளநோட்டு வேட்டை ஏற்கெனவே இருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் கைது 2,36,500 கள்ளநோட்டு பறிமுதல்

கிண்டியில் தொடரும் கள்ளநோட்டு வேட்டை ஏற்கெனவே இருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் நான்கு பேர் கைது, 2,36,500 கள்ளநோட்டு பறிமுதல்.

சென்னை கிண்டி மடுவின்கரையில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையில் கடந்த 16ம் தேதி இரவு அஜாஸ் என்பவர் மதுவாங்கும் போது 200 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்துள்ளார். விற்பனையாளர் சரவணன் அதனை கள்ளநோட்டு என கண்டறிந்து அவரை பிடித்து கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை தொடர்ந்து அவருக்கு கள்ளநோட்டை கொடுத்த அம்ருதீனை கைது செய்து 18,900 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு இதில் தொடர்புஐய மேலும் சிலரை தேடி வந்த நிலையில் இன்று சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த ஷாயின்ஷா(34) கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாமண்டூரை சேர்ந்த ராஜீ(52), உத்திரமேரூரை சேர்ந்த பிரபு(32), செங்கல்பட்டை சேர்ந்த சையத்ஜியாஷல்லா(28), ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 695- 200 ரூபாய் கள்ள நோட்டுகளும், 195- 500 ரூபாய் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 2,36,500 ரூபாய் கைப்பற்றப்பட்டது.இவர்கள் ரகு என்பவரிடம் 30000 ரூபாய் கொடுத்து 1லட்ச ரூபாய் கள்ள நோட்டை வாங்கி கைமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்தது.இவர்கள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் கிண்டி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!