அடேங்கப்பா...சென்னை பள்ளியில் பாலியல் தொல்லை: 900 பேர் கூட்டாக புகார்!

அடேங்கப்பா...சென்னை பள்ளியில் பாலியல் தொல்லை: 900 பேர் கூட்டாக புகார்!
X
செனனை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 900 பேர் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.

சென்னை கே.கே.நகர் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் எழுந்தது. அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு புகாராக வந்துகொண்டிருக்கிறது. மகரிசி வித்யா மந்திர், செயின்ட் ஜார்ஜ் பள்ளி ஆசிரியர்கள் மீத புகார் எழுந்துள்ளது. சென்னை பாரிமுனையில் உள்ள தடகள பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்படியாக இந்த விவகாரம் நீண்டுகொண்டே செல்கின்ற வேளையில் மேலும் ஒரு புகார் பகீர் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்தபல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் இதுவரை ஒரு புகார் கூடவில்லை என்றும் கூறி அந்த பள்ளியை சேர்ந்த 900த்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மாநில குழந்தைகள் நல உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மையத்திற்கு புகார் அளித்தள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் வருகிற 8ம் தேதி அப்பள்ளியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!