மடுவின்கரை குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர்: பாஜக ஆர்ப்பாட்டம்

மடுவின்கரை  குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர்: பாஜக ஆர்ப்பாட்டம்
X

கழிவுநீரை அகற்ற கோரி மடுவின்கரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர்

மடுவின்கரையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் சூழ்ந்திருப்பதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

சென்னை கிண்டி, மடுவின்கரையை அடுத்த மசூதி காலனி பகுதியில், தொடர் கன மழையின் காரணமாக தேங்கிய மழை நீரை முறையாக அகற்றப்படாமலும், செல்லுவதற்கான வழித்தடம் முறையாக இல்லையென்றும், கூறி பாஜக சைதை கிழக்கு மண்டல தலைவர் குமார் தலைமையில், இலக்கிய அணியை சேர்ந்த வீரசெல்வம் உள்ளிட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

எப்போது மழை பெய்தாலும் மசூதி காலனியில் மழை நீர் தேங்குவது மட்டுமில்லாமல், மழை நீர், கழிவு நீரோடு கலந்து தெருக்கள் முழுவதும் கழிவு நீராக ஓடுகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நடந்து செல்லும் போது துர்நாற்றம் வீடுவதோடு, கால்களில் சேற்றுப்புண், உள்ளிட்ட நோய் தொற்றுகள் ஏற்படும அபாயம் இருப்பதாக, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிண்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மேலும் மழை நீர் வடிகால்வாயில் கழிவு நீர் கலக்கப்படுவதாகவும் அதனையும் தடுத்து நிறுத்தவும், கழிவு நீர் கால்வாய்களின் அடைப்புகளை சரிசெய்யவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்