கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது

கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது
X

கிண்டி தனியார் பாரில் குத்தாட்டம் போட்ட பெண்.

சென்னை கிண்டியில் பெண்களை வைத்து குத்தாட்டம் நடத்திய பார் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் ஒரு தனியார் மது பான பார் செயல்பட்டு வருகிறது.

இங்கு மது குடிக்க வரும் ஆண்களின் ஆசையை தூண்டும் வகையில் பெண்களை வைத்து குத்தாட்டம் போட வைத்து மது போதை ஆசாமிகள் மது மயக்கத்தில் மாதுவின் கலக்கத்தில் பணத்தை கொடுத்தும், அவர்களும் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் கிண்டி போலீசார் பாரின் மேலாளர் மோகன் என்பவரை கைது செய்து, பாரில் இருந்து ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன் மீது வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்