சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து
X

சைதாப்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரியும் காட்சி

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை, அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றிலிருந்து திடீரென முன்பக்கத்திலிருந்து புகை வர துவங்கியது.
உடனடியாக கார் ஓட்டுநர் எடிசன்(43), என்பவர் காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு இறங்கி விட்டார். காரின் முன் பகுதி உடனேயே தீப்பிடித்து மளமளவென எரியத் துவங்கியது.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தனர். அதன் பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர். காரின் முன் பகுதி மட்டும் முழுவதும் எரிந்து சேதமானது.
இதனால் செல்லம்மா கல்லூரி முதல் சின்னமலை ஏஜி சர்ச் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் காரை அகற்றிய பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
விசாரணையில் கார் வடபழனியில் சர்வீஸ் செய்து விட்டு சின்னமலையில் உள்ள கம்பெனிக்கு எடுத்து சென்ற போது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்து குறித்து கிண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story