இயக்குனர் ஷங்கர்மகள் திருமண வரவேற்பு திடீர் நிறுத்தம்?

இயக்குனர் ஷங்கர்மகள்  திருமண வரவேற்பு  திடீர் நிறுத்தம்?
X
கோலிவுட்டில் பிரமாண்டத்துக்கு பேர் போன ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவுது .

கோலிவுட்டில் பிரமாண்டத்துக்கு பேர் போன ஷங்கர் தனது மகளின் திருமண வரவேற்பை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல்கள் பரவுது .

இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் போன ஜூன் மாதம் திருமணம் நடைப்பெற்றது.


தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார். இவரது மகன் ரோஹித், புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இதற்கிடையே ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது.

பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்திருந்தார். கொரோனா உச்சத்தில் இருந்த அந்த சமயத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டிருந்தது. இதனால் அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

கொரோனா குறைந்து ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதும் சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என அப்போதே கூறப்பட்டது. இதையடுத்து வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமண வரவேற்பு நடைப்பெறுவதாக கடந்த மாதமே திரையுலகினரை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்தனர் ஷங்கரும், அவரது மனைவியும். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுமார் 1500 பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையின் விலை 9000. கலை இயக்குனர் முத்துராஜே இந்த வரவேற்பு அரங்கையும் பிரமாண்டமாக அமைச்சிருந்தாராம். இதற்கு மட்டும் 6 கோடி செலவு ஆனதாம்.


ஆனால், தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஷங்கரிடம் இருந்து அனைவருக்கும் செய்தி வந்துள்ளதாம். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியலை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!