/* */

ரூ.5.49 கோடி வரிமோசடியில் ஈடுபட்டவர்கள் கைது: ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகம் நடவடிக்கை

ரூ.5.49 கோடி உள்ளீட்டு வரி(ஐடிசி) மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது: ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகம் நடவடிக்கை

HIGHLIGHTS

ரூ.5.49 கோடி வரிமோசடியில் ஈடுபட்டவர்கள் கைது: ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகம் நடவடிக்கை
X

ரூ.5.49 கோடி அளவுக்கு உள்ளீட்டு வரியை (ஐடிசி) மோசடியாக பெற்ற நபர்களை, சென்னையில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பணியாளர்களை அனுப்பும் சேவைகள் வழங்குவதாக சென்னையில், இரு நிறுவனங்களை சிலர் நடத்தி வந்துள்ளனர். அளிக்கப்படாத சேவைக்கு இவர்கள் ரூ.45.72 கோடிக்கு போலி ரசீதுகள் உருவாக்கி, அதன் மூலம் ரூ.5.49 கோடி உள்ளீட்டு வரியை மோசடியாக பெற்றுள்ளனர். இது குறித்து சென்னையில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரக அதிகாரிகள், மோசடி நிறுவனங்களின் அலுவலகங்களிலும், அதன் உரிமையாளர் வீட்டிலும், கடந்த மாதம் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் சோதனை நடத்தினர்.

இதில் போலி நிறுவனங்களை நடத்தி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் கண்டறிப்பட்டன. இந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் 2 இயக்குனர்கள் இந்த மோசடிக்கு காரணம் என தெரியவந்தது. இதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்த ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள், சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் கடந்த 1 மற்றும் 2ம் தேதிகளில் ஆஜர்படுத்தினர். இந்த மோசடி தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குனரகத்தின், முதன்மை கூடுதல் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Oct 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...