ரூ.2 000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம்: இன்று தொடங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலுக்கு வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. அதில், 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இருந்தது.
தேர்தலில் தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது, முதல்வராக பதவியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில், கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டமும் அடங்கும்.
நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இந்த மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மதியம் 12 மணி அளவில் தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
வருகிற 15-ந்தேதி முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்ட ரேசன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ரேசன் கடைகளில் கூட்டம் சேரக்கூடாது என்பதில் உணவுத் துறை அதிகாரிகள் மிக கவனமாக உள்ளனர். அதனால், வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கி, அதன் அடிப்படையில் தினமும் 200 பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்று முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியும் தொடங்க இருக்கிறது. ரேசன் கடை பணியாளர்களே இன்று முதல் 3 நாட்கள், ரேசன் கார்டு எண்கள் அடிப்படையில் டோக்கன் வழங்க இருக்கின்றனர்.
அந்த டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த டோக்கன் வழங்கும் பணிகள் வரும் 12-ம்தேதி வரை நடைபெறுகிறது.
வரும் 15-ம்தேதி முதல் ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை சமூக இடைவெளியுடன் டோக்கன் அடிப்படையில் மட்டுமே ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்பட இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu