மெட்ரோ ரயிலில் செல்வோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு அதிரடி பரிசுகள்

மெட்ரோ ரயிலில் செல்வோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு அதிரடி பரிசுகள்
X

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பரிசு விபரம்.

மெட்ரோ ரயிலில் செல்வோருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு அதிரடி பரிசுகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்ன மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவையை 54.41 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் வரை மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ நிலையம் வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 10.50 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இதுவரை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் அற்புதமான திட்டங்களை அறிவிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த திட்டங்கள் நேற்று முதல் (21.03.2022) அமலுக்கு வந்தது.

1. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும். இதுதவிர மேலும் 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை (ரூ.2,500/- மற்றும் ரூ.50/- வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படும்.

2. மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500/- மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்படும். அதில் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

3. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்படும், மேலும், இதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ.1,450/- மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள், பயணிகளை ஊக்குவிக்கவும், பயனளிக்கவும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!