Rain Relief Material To Public புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண உதவி:இபிஎஸ் வழங்கல்

Rain  Relief Material To Public  புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு  நிவாரண உதவி:இபிஎஸ் வழங்கல்
X

தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித்தலைவருமான இபிஎஸ்.(கோப்பு படம்)

Rain Relief Material To Public சென்னை திருவெற்றியூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல்நிவாரணப் பொருட்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Rain Relief Material To Public

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகள் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த புயல் மழையில் இந்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலையை கடுமையாக பாதிக்கப்பட்டது, தாழ்வான பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்,

மக்களுக்கு தேவையான உணவு பால் தண்ணீர் பெரும்பாலான பகுதியில் கிடைக்கவில்லை சென்னை மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது, சென்னையில் ஒட்டி உள்ள புறநகர் பகுதியில் இருந்து மழை வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகளில் புகுந்து அங்கு வசித்த மக்கள் வெளியேறாத சூழ்நிலை ஏற்பட்டது

விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னை மாநகரத்தில் கனமழை பொழிந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட தேங்காமல் பார்த்துக் கொள்வோம் என்று மார்தட்டி பேசி வந்தனர்.ஏற்கனவே ஒருமுறை சென்னை மாநகரத்தில் வெறும் மழை தான் பொழிந்தது அப்பொழுதே சென்னை வெள்ளக்காடாக காட்சி அளித்தது

அரசாங்கம் உண்மையாகவே மக்கள் மீது அக்கறை எடுத்துக் கொண்டால் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் தமிழக முதலமைச்சர் பொறுப்பில்லாமல் அலட்சியமாக மெத்தனமாக இருந்த காரணத்தினால் இந்த புயலால் தாழ்வான பகுதிகளில் சென்னை மாநகர முழுவதும் 20 ஆயிரம் 30 ஆயிரம் சாலைகளுக்கு மேல் மழை தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா திமுக அரசின்போது பருவமழைப் பொழுது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கப்பட்டனர். பல்வேறு துறை அதிகாரிகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து அரசின் மூலம் நல்ல ஆலோசனை வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் எந்தெந்த பகுதியில் தூர் வரவேண்டும் எந்தெந்த கூட்டங்களில் அடைப்பு இருக்கின்றது என்று கணக்கிடு ஆய்வு செய்து வேகமாக வேலை செய்து தூர் வாரினர். இதற்கு முன்பு எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியது அந்த சாலைகளை கணக்கிட்டு தண்ணீர் தேங்கிய உடன் தண்ணீரை வெளியேற்றுவதற்கு மின்மோட்டார் கொண்டு முன்கூட்டியே வரவழைத்தல் தயார் நிலையில் வைத்திருந்தோம்... எப்படி மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் செயல்பட்டது அதிமுக அரசு.ஆனால் இந்த விடியா திமுக அரசு மக்களுக்கு சரியாக உதவிவில்லை அதிகாரிகளுக்கு சரியான ஆலோசனை வழங்காமல் இருந்திருக்கிறார்கள்,

சேலத்தில் நடக்கும் திமுக இளைஞர்களின் மாநாட்டிற்கு துறை சார்ந்த அமைச்சர் முழு கவனம் செலுத்தினார்கள் தவிர, இங்கே புயல் வரும் என்று தெரிந்தும் அலட்சியமாக விட்டு, மாநாட்டிற்காக செலவழித்த நேரத்தை இங்கு செலவழித்து இருந்தால், இப்படி ஒரு விஷயத்தை குறைத்து இருக்கலாம். 20 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் சென்னையில் ஒரு துளி தண்ணீர் கூட நிற்காது என்று ஒரு அமைச்சர் கூறினார், ஆனால் இப்பொழுது தேங்கி இருக்கும் தண்ணீரைக் குறித்த அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை,

ஆகையால் இனி மேலும் இது போன்ற நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம்.கோவளம் அடையாறு கொசத்தலையாறு ஆகிய மூன்று ஆறுகளைச் சுத்தப்படுத்தி அதன் மூலம் மழை நீர் அகற்றும் திட்டத்தை அதிமுக ஐந்து ஆண்டு கால திட்டமாக மேற்கொண்டு வந்தோம்.

எதற்கெடுத்தாலும் பொய் பேசும் அமைச்சர்கள் இரண்டு பேர் இதற்கு முன்பாக குடிநீர் கால்வாய் திட்டம் 90% முடிவடைந்தது என்று கூறினார்கள், இது இந்த முதலமைச்சர் சொன்னது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற அமைச்சர்கள் கூறியது,

ஆனால் நேற்றைய தினம் 51% பணி தான் நிறைவேற்றப்பட்டது என்று கூறுகிறார்கள்.அனைத்திற்கும் பொய் பேசுவது தான் இந்த ஆட்சி,இப்படி தண்ணீர் தேங்காது என்று கூறி போய் பேசி மக்களை ஏமாற்றி விட்டார்கள் இதனால் தான் மழை தண்ணீர் அனைத்து இடத்திலும் தேங்கி நின்றது.ஒரு வாரமாக கும்பகர்ணன் போல் தூங்கிவிட்டு இப்பொழுது தண்ணீர் தேங்கியதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.இந்தியாவிலேயே எடுத்துக்காட்டான மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் கூறுகிறார், எதில் ஊழல் செய்வதில்லையா?

அதிமுக காலத்தில் மின் விநியோகம் இரவில் கொடுக்கப்பட்டது எங்கள் ஆட்சியில் தான் பூமி அடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டது, இவர்கள் ஒழுங்காக ஒருங்கிணைத்து செயல்படாமல் இருந்ததால் தான் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது,மக்களுக்கு ஆங்காங்கே இருக்கும் கடைகளில் பால் பவுடர்கள் பாக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தால் இப்படி தட்டுப்பாடும் வந்திருக்காது..மக்களுக்கு சரியான ஆலோசனையை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்,

முன்னெச்சரிக்கையாக அவர்களின் பொருட்கள் உணவு ஆவணங்கள் உள்ளிட்டவர்களை சேர்த்து பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்க வேண்டும்,இதையெல்லாம் செய்யாமல் இந்த அரசின் மெத்தன போக்கால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது,அம்பத்தூர் சிப்காட் பகுதியில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது, பழுதடைந்த பொருட்களுக்கு அரசு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1200 ஏக்கர் நெற்பயிர் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்படைந்துள்ளது, இதே போல பல மாவட்டங்களில் உள்ளது சுமார் 7000 ஏக்கர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.இப்படி தமிழ்நாடு முழுவதும் எங்கெங்கெல்லாம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்து இருக்கிறதோ அவர்களுக்கு நிவாரணம் இது தமிழக அரசு வழங்க வேண்டும்,அமைச்சர் மாசுப்ரமணியம் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என்று கூறினார்,

மழை நீர் தேங்கிய பிறகு மோட்டாரை தேடிக் கொண்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் கூறுகிறார்.மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் மக்களுடைய மதிப்பை எடுத்துக் கூறுவது எதிர்க்கட்சியின் பணி, இருப்பதைத்தான் நாங்கள் பேசுகிறோம். வடிநீர் கால்வாய் திட்டம் கொண்டு வந்தது அண்ணா திமுக, ஆனால் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு தங்கள் பணியை சரியாக செய்யாமல் இப்போது எங்களை குறை கூறுகிறது,

எம்எல்ஏக்கள் ஒரு மாதம் சம்பளம் கொடுத்தால் போதுமா 4800கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள், உச்சநீதிமன்றம் கூறியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.திமுகவின் ஊழலை ஊடகங்கள் மறைகின்றன, உண்மையை வெளிக் கொண்டு வந்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் திமுகவுக்கு நல்ல பாடத்தை புகட்டுவார்கள்.

Tags

Next Story
ai in future agriculture