சென்னையில் 26 தேதி 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னையில்  26 தேதி  1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
சென்னையில், 1600 இடங்களில் வரும் 26ம் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 26 ம் தேதி அன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம், ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், 12ம் தேதி நடைபெற்ற 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகளும், 19ம் தேதி அன்று நடைபெற்ற 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2,02,931 கோவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வரும் 26 ,ம் தேதி ஞாயிறன்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளது. தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை, பொதுமக்கள் மாநகராட்சியின் இணையதளம் வாயிலாகவும், 044 - 2538 4520, 044 - 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்