காசிமேடு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்கல்

காசிமேடு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால  நிவாரணம் ரூ.6 ஆயிரம்  வழங்கல்
X

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்களுக்கு  நிவாரண உதவி வழங்கிய  சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி

ராயபுரம் தொகுதியில் 12 ஆயிரம் பேர், ஆர்.கே நகரில் 15 ஆயிரம் பேர் என மொத்தம் 26 ஆயிரம் மீனவர்கள் பயன்பெறுகின்றனர்

தமிழகத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியின்போது முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கான அறிவிப்பை தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர் நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குநர் அலுவலகத்தில் மீன்பிடி குறைவுகால நிவாரண திட்டம், தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம், தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் ராயபுரம் மற்றும் ஆர்கே நகர் தொகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ராயபுரம் தொகுதியில் 12 ஆயிரம் பயனாளிகள், ஆர்.கே நகரில் 15 ஆயிரம் என மொத்தம் 26 ஆயிரம் மீனவர்கள் இந்த திட்டங்களின் கீழ் பயன்பெறுகின்றனர். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அலுவலர் செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், வழக்கறிஞர் அணி நிர்வாகி மருதுகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!